பாஜக பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் மாற்றம்

தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் கேசவ விநாயகத்துக்கு புதிய பதவி வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவர், 2015ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, புதிய பொறுப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி