2026 கால்பந்து உலகக் கோப்பை தொடருக்கான கத்தார் அணியில், கேரளாவின் தலச்சேரியை பூர்வீகமாக கொண்ட 19 வயது இளம் வீரர் முகமது ஜம்ஷித் களம் காண்கிறார். கத்தாரின் புகழ்பெற்ற கால்பந்து அகாடமியில் பயின்று திறமையை வளர்த்து கொண்ட இவர், தற்போது முன்னணி கிளப் அணியான அல்-துஹைல் எஸ்சி அணிக்காக விளையாடி வருகிறார். உலகக் கோப்பை வரலாற்றில் கேரளா மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு வீரர் கத்தார் தேசிய அணியில் இடம்பிடித்து விளையாடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.