வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கடனை தள்ளுபடி செய்த கேரளா அரசு

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 555 நபர்களின் ரூ.18.75 கோடி மதிப்பிலான 1,620 வங்கி கடன்களை, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து செலுத்த கேரள அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவும் வகையில், கடன் சுமையை அரசே ஏற்பதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். பேரிடர் பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வர கேரளா அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி