'தி கேரளா ஸ்டோரி 2' படத்திற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்

இயக்குநர் சுதீப்தோ சென் இயக்கத்தில் 2023ல் வெளியான 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் இரண்டாம் பாகமான 'தி கேரளா ஸ்டோரி 2' வருகிற 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் டிரைலர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், 'தி கேரளா ஸ்டோரி - 2' சமூகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்’ என குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி