நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் அவரது 15 ஆண்டுகால காதலர் ஆண்டனி தட்டில் என்பவருக்கும் இன்று (டிச.12) கோவாவில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. பிராமண முறைப்படி இந்த திருமணம் நடந்தது. அதன்படி தந்தையின் மடியில் கீர்த்தி சுரேஷ் அமர்ந்த நிலையில் அவர் கழுத்தில் ஆண்டனி தாலி கட்டினார். இந்த திருமணத்தில் தம்பதியின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். திருமண புகைப்படங்களை கீர்த்தி வெளியிட்டுள்ளார்.