கேதார்நாத் புனித யாத்திரை பாதை நிலச்சரிவால் பாதிப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் சமவெளிப் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுகிறது. மலை மாவட்டங்களில் மழை மற்றும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக கேதார்நாத் சிவன் கோவிலுக்கு செல்லும் புனித யாத்திரை பாதையில், ருத்ரபிரயாக் மாவட்டம் சோன்பிரயாக்-கவுரிகுண்ட் இடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. பிரதான நெடுஞ்சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டது. இதனால் ஏராளமான பக்தர்கள் பயணத்தை தொடர முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி