புதிய லுக்கில் கவாஸாகி Z650 S பைக் அறிமுகம்

கவாஸாகி நிறுவனம் தனது 2027-ம் ஆண்டு Z650 S மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.59 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய Z650 மாடலைவிட ரூ.33,000 அதிகமாகும். புதிய LED ஹெட்லைட், டெயில் லைட், அகலமான ஹேண்டில்பார் உள்ளிட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் 649 சிசி பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 67 பிஎச்பி பவர், 64 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதிகளும் உள்ளன.

தொடர்புடைய செய்தி

✕
✕