கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியபோது எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். “திமுகவின் அனைத்து வழக்குகளையும் சொல்லி மிரட்டி பணிய வைத்துள்ளனர். அதன்பேரிலேயே கலைஞரின் உத்தரவின்படியே கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. அவர்கள் நினைத்திருந்தால், கச்சத்தீவு தாரைவார்க்கப்படுவதை தடுத்திருக்கலாம்” என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மொத்தமாக எழுந்து நின்று கூச்சலிட்டதால் சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.
நன்றி: NewsTamilTV24x7