காசி தமிழ்ச் சங்க விழா உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டில் இருந்து சுமார் 1,400 பேர் காசிக்கு அழைக்கப்பட உள்ளனர். காசி தமிழ் சங்க விழாவின் இறுதி நிகழ்ச்சியை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.