தோகைமலை சாலையில் மரத்தில் வைக்கும் மோதி இளைஞர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் திருவரங்கம் தாலுக்கா நவலூர் குட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த மரியா ஜெனிஸ் (24) என்பவர் நேற்று தோகைமலை சாலையில் இருவரை பின்னால் அமர வைத்துக்கொண்டு பைக்கில் சென்றபோது, சாலை ஓரம் இருந்த புங்க மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது தந்தை பவுல்ராஜ் அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயமடைந்த மற்ற இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி