அதற்குப் பின்னர் அவர் ரயிலில் அடிபட்டு இறந்ததாக தெரிவித்தனர். சம்பவம் அறிந்து அந்தப் பகுதியில் இருந்து வந்திருந்தவர்கள் இளம் பெண் இந்த பகுதியைச் சேர்ந்தவர் அல்ல என்பதை உறுதி செய்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கரூர் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குளித்தலை மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத இந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.