கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், இரும்பூதிப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் அழகுரத்தினம் மகள் சரஸ்வதி (26) என்பவர், குடும்பப் பிரச்சனை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தந்தையின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.