பஞ்சப்பட்டியில் உலக ஈர நில தினம் விழிப்புணர்வு பேரணி

கரூர் மாவட்டம் குளித்தலை விதைகள் அறக்கட்டளை, அம்பேத்கர் கல்வி இயக்கம் மற்றும் Aasanya Foundation சார்பில் உலக ஈரநில தினம்-2026 விழிப்புணர்வு நிகழ்ச்சி பஞ்சப்பட்டி ஏரியில் நடைபெற்றது. தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரி என அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில், முன்னாள் குளித்தலை ஒன்றிய குழு தலைவர் டி. டி விஜய விநாயகம் கலந்துகொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். டாக்டர் அம்பேத்கர் இரவு பாடசாலை மாணவ மாணவியர்கள் ஏரியில் மரக்கன்றுகள் நட்டு, குப்பைகளை அகற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி