குளித்தலையில் கணவருடன் தகராறு விஷம் குடித்து உயிரிழப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புதுப்பாளையத்தைச் சேர்ந்த சாந்தி (50) என்பவரின் மகள் சுகன்யா, 16 ஆண்டுகளுக்கு முன்பு வடிவேலுடன் திருமணம் செய்துகொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த தம்பதியினர் மீண்டும் இணைந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் சுகன்யா விஷம் குடித்தார். கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி