விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குளித்தலை சட்டமன்ற தொகுதி மாவட்டம் சார்பில் தோகைமலை கிழக்கு ஒன்றியத்தில் நேற்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் பிஎல்ஏ 2 ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் பிச்சைமுத்து தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக குளித்தலை சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல், பெரம்பலூர் மண்டல செயலாளர் வழக்கறிஞர் ஸ்டாலின், மண்டல துணை செயலாளர் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.