கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளரான மோகனசுந்தரி (21), தளபதி விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் பதவி ஏற்க வேண்டும் என அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோயிலில் பிரார்த்தனை செய்தார். தனது வேண்டுதலை நிறைவேற்ற 3 நாட்கள் விரதம் இருந்து, நேற்று (மே 16) அய்யர்மலை 1017 படிகளில் மண்டியிட்டு ஏறி சாமி தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றினார்.