கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா தோகைமலை அருகே கல்லடை ஊராட்சி கீழவெளியூர் பாரதிநகர் மயானக்காட்டில், உடல் உறுப்பு தானம் செய்த அன்பரசன் நினைவாக, அம்பேத்கர் அன்பு அறக்கட்டளை மற்றும் கீழவெளியூர் மரங்களின் நண்பர்கள் இயக்கம் சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஊர் முக்கியஸ்தர்கள், அம்பேத்கர் அன்பு அறக்கட்டளை மற்றும் கீழவெளியூர் மரங்களின் நண்பர்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.