கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவில் தெருவைச் சேர்ந்த மது (45) என்பவர், தர்மராஜ் ஓட்டி வந்த காரில் உதயகுமாருடன் திருக்காம்புலியூர் சாலையில் சென்றபோது, எதிரே வந்த ரவீந்திரன் ஓட்டி வந்த கார் மோதியதில் மது, தர்மராஜ், உதயகுமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மது அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீஸார் நேற்று (பிப்.25) வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.