குளித்தலையில் தென்கரை பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா தென்கரை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், துணைத் தலைவர் வாழைக்காய் வியாபாரி சேட்டு தலைமையில், குளித்தலை நீர்வளத்துறை ஆற்று பாதுகாப்பு பிரிவு உதவி பொறியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. தென்கரை மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால் பகுதியில் பயிர் செய்துள்ள வாழை, கரும்பு, வெற்றிலை பயிர்களுக்கு தண்ணீர் தேவையை கருதி, பங்குனி, சித்திரை மாதங்களில் வீசும் சுழல் காற்றில் இருந்து வாழை பயிர்களை காப்பாற்ற மூங்கில் குச்சிகள் அமைக்கவும், அதற்கு 350 கன அடி நீர் திறந்து விடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி