மேட்டுமருதூர் அங்காள பரமேஸ்வரி கோயில் தேர் வடம் பிடித்தல்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுமருதூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் சிவராத்திரி விழாவின் மூன்றாம் நாளான இன்று தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நான்கு முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், பக்தர்கள் அளித்த தேங்காய், வாழைப்பழம் அபிஷேகங்களுடன் நிலைக்கு வந்தது. கரூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த குடிப்பாட்டுக்காரர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி