குளித்தலையில் பலத்த காற்றினால் மரங்கள், மின்கம்பங்கள் சேதம்

கரூர் மாவட்டம் குளித்தலை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இராஜேந்திரம், பெரிய பாலம், திம்மாச்சிபுரம் பகுதிகளில் 5 மரங்களும், 5 மின்கம்பங்களும் சாய்ந்து சாலையில் விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. தீயணைப்புத் துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி