அதைத் தொடர்ந்து நேற்று காலை பொங்கல் வைத்து மாவிளக்கு மற்றும் கிடா வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று இரவு கோவில் முன்பு தீக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைக்குழந்தையுடன் தீக்குழியில் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர். அதன் பின்னர் விரதம் இருந்த பெண்கள் கோவில் முன்பு மண்டியிட்டு நெருப்பை தனது முந்தானையில் வாங்கும் மடிபிச்சை எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் வேல் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது