சிறப்பு அழைப்பாளர்களாக சிபிஎம் நிர்வாகி மற்றும் மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜ், டி. ஒய். எப். ஐ முன்னால் மாநில செயலாளர் பாலா, சி. பி. ஐ. எம் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, சிபிஎம் மாவட்ட செயலாளர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதில் பரபரப்பான இறுதி போட்டியில் குளக்காரன்பட்டி பாரதி இளைஞர் நற்பணி மன்ற கபாடி அணி வெற்றி பெற்று முதல் பரிசாக ரூ. 30 ஆயிரத்து 22 ரொக்கப்பணம் மற்றும் 5 அடி சுழல் கோப்பையினை தட்டிச்சென்றது. மேலும் 2வது பரிசாக ரூ. 20 ஆயிரத்து 22 ரொக்கப்பணம் மற்றும் 4 அடி உயரம் கொண்ட சுழல் கோப்பையினை திண்டுக்கல் மாவட்டம் காச்சக்காரன்பட்டியை சேர்ந்த மாணிக்கம் தம்பிகள் கபாடி அணியினரும் பெற்றனர்.
இந்த கபாடி போட்டியில் சிபிஐஎம் நிர்வாகிகள் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரலான கபாடி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.