வேலாயுதம்பாளையத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வேலாயுதம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இரண்டு கால யாக வேள்வி பூஜைகளுக்குப் பிறகு, சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கும்பங்களை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து, கோவில் கோபுர கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீரினை ஊற்றி குடமுழுக்கு செய்தனர். தொடர்ந்து மூலவர் சிலைகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி