குளித்தலை: வீட்டில் தஞ்சம் அடைந்த புள்ளி மான்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வடசேரி மற்றும் கடவூர் பகுதிகளில் புள்ளிமான்கள் உலாவி வருகின்றன. இந்நிலையில் இன்று அங்கே திரிந்த புள்ளிமான்களில் சுமார் இரண்டு வயதுடைய புள்ளிமான் ஒன்று வழி தவறி மேய்ந்து வீரணம்பட்டி பகுதியில் மேய்ந்து திரிந்த போது அங்கிருந்த தெரு நாய்கள் அதனை கடிக்க துரத்தியுள்ளன. அப்போது மிரண்டு ஓடி வந்த மான் அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்து தஞ்சம் அடைந்தது. 

வீட்டின் உரிமையாளரான அரசு பேருந்து ஓட்டுநர் செல்வகுமார் இதைப் பார்த்து வனத்துறையினர் மற்றும் முசிறி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் புள்ளிமானை வலைவீசி பிடித்தனர். வலையில் பிடிக்கும்போது மானிற்கு சிறு காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து கால்நடை மருத்துவர் மொழியரசிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்து அவர் புள்ளிமானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் வனஅலுவலர் ஈஸ்வரி மற்றும் வனவர் சிவரஞ்சனி ஆகியோர் புள்ளிமானை மீட்டு அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

தொடர்புடைய செய்தி