ஆர். டி மலையில் சனி பிரதோஷ வழிபாடு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர். டி மலை ஸ்ரீ விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. கோவில் வெளியே நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பல்வேறு திரவியங்களால் பூஜை செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி