கரூர்: அடையாளம் தெரியாத ஏழு இருசக்கர மோட்டார் வாகனங்கள் பறிமுதல்

கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் பதிவு எண் இல்லாத அடையாளம் தெரியாத வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதை அறிந்த குளித்தலை உதவி காவல் ஆய்வாளர் சரவணகிரி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ததில் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அதனையடுத்து அங்கிருந்த 7 இருசக்கர மோட்டார் வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி