கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோயிலில் 11 உண்டியல்களில் இருந்த காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. தான்தோன்றிமலை உதவி ஆணையர் ராஜேஸ்வரி முன்னிலையில், தக்கார் கணபதி முருகன், செயல் அலுவலர் தங்கராஜீ, ஆய்வாளர் ஹேமலதா ஆகியோர் மேற்பார்வையில் 50க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். இதில் ரொக்கப் பணமாக ரூ. 8,18,536, 9.100 கிராம் தங்கப் பொருட்கள் மற்றும் 42.200 கிராம் வெள்ளிப் பொருட்கள் வருவாயாகக் கிடைத்தன.