கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் அருகே சுங்ககேட் ரவுண்டானா சந்திப்பில் உள்ள உயர் மட்ட வழிகாட்டி பெயர் பலகை, மரக்கிளைகளால் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். நெடுஞ்சாலைத் துறையினர் பெயர் பலகை தெளிவாகத் தெரியும் வகையில் மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.