இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் அலுவலகம் முன்பு, கோவில் நிலத்தில் விவசாயம் செய்து குத்தகைக்கான நெல்லை கோவில் நிர்வாகத்திடம் கொடுத்த விவசாயிக்கு, கடந்த 4 மாதங்களாக ரசீது வழங்காமல் அலட்சியமாக நடந்து கொண்ட நிர்வாகத்தை கண்டித்து சிபிஐஎம் குளித்தலை ஒன்றிய குழு சார்பில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்குப் பிறகு விவசாயிக்கு உரிய ரசீது கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.