மத்திய அரசு கொண்டு வந்த VB-G RAM (G) சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக செயல்படுத்த வேண்டும், அனைவருக்கும் வேலையும் சட்டக் கூலியும் முழுமையாக வழங்க வேண்டும், கரு விழித்திரை ஸ்கேன் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இராஜேந்திரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய செயலாளர் சிவா தலைமையில் போராட்டம் நடத்தி, ஊராட்சி செயலாளரிடம் மனுக்கள் அளித்தனர்.