மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், பாஜக ஒன்றிய அரசை கண்டித்து கரூர் மாவட்டம் குளித்தலை மேற்கு ஒன்றியம் கடைவீதி முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி, விசிக மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.