குளித்தலையில் கருப்பு துணியால் கண்களை கட்டி போராட்டம்

தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. யூஜிசி நிர்ணயித்த 57,700 ரூபாய் ஊதியம், 12 மாத ஊதியம், ஓய்வு பெற்றவர்களுக்கு 25 லட்சம் பணிக்கொடை, பெண் விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு துணியால் கண்களை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி