குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட காவிரி நகர் பகுதியில், தனியார் மருத்துவமனைகள், வங்கிகள், சட்டமன்ற அலுவலகம், உழவர் சந்தை, வணிக கடைகள் நிறைந்த முக்கிய சாலையில், கடந்த 3 நாட்களாக காவிரி குடிநீர் குழாய் உடைப்பால் மண் அரிப்பு ஏற்பட்டு திடீர் பள்ளம் உருவாகியுள்ளது. இதனால் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த திடீர் பள்ளத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்துகள் ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.