கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் பணிபுரியும் 80 தூய்மைப் பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு, நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஏபிஎஸ் ஜவுளிக்கடை உரிமையாளர் சீனிவாசன், ஆண்களுக்கு வேட்டி துண்டு மற்றும் பெண்களுக்கு சேலைகளை வழங்கியுள்ளார். இந்த நிகழ்வில் மேலாளர் குருராஜா மற்றும் விற்பனையாளர்கள் உடனிருந்தனர்.