கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் மலை அடிவாரமண்டபத்தில் உள்ள விநாயகர் மற்றும் பாலமுருகன் ஆகிய கோவில்கள் மற்றும் கோவில் விமானம் ஆகியவற்றிற்கு திருப்பணி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று பாலாலயவிழா நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓதி விழா நடைபெற்றது. விழாவில் செட்டியார் சமூகம், சோழியவெள்ளாளர் சமூகம், விஸ்வகர்மா சமூகம் ஆகியவற்றைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் உபயதாரர்கள், உள்ளூர் பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.