கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விதைகள் அறக்கட்டளை மற்றும் ஜியோ இந்தியா பவுண்டேஷன் இணைந்து நடத்திய ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற 50 மாணவர்களுக்கு விதைகள் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ஜெயந்தி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்துரு ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.