குளித்தலையில் துணை சுகாதார மைய கட்டிடம் திறப்பு விழா

கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி 1வது வார்டு மணத்தட்டையில் பொது சுகாதார துறை சார்பில் ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்ட நகர் நல துணை சுகாதார மையக் கட்டிடத்தை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கரூரில் நேற்று காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். 

அதைத் தொடர்ந்து நகர் நல துணை சுகாதார மையக் கட்டிடத்தில் குத்து விளக்கு ஏற்றும் விழா நடைபெற்றது. விழாவில் குளித்தலை நகர் மன்றத் தலைவர் சகுந்தலா பல்லவிராஜா குத்து விளக்கு ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். விழாவில் நகராட்சி ஆணையர் நந்தகுமார், குளித்தலை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவக்குமார், நகராட்சி பொறியாளர் கார்த்திக், நகர்மன்ற உறுப்பினர்கள் கண்ணகி, பொன்னர், சரோஜா, வட்டச் செயலாளர் திலீபன், நகரத் தொண்டர் அணி அமைப்பாளர் மது மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி