அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், எம்எல்ஏ மாணிக்கம், குளித்தலை நகர்மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா ஆகியோர் குத்து விளக்கேற்றி அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர். மேலும் மாவட்ட ஆட்சியர், சார்பதிவாளர் அலுவலகத்தின் அறைகள் மற்றும் பத்திரங்கள் சேகரித்து வைத்திருக்கும் அறை ஆகியவற்றினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ, கரூர் மாவட்ட பதிவாளர் நிர்வாகம் குமார், மாவட்ட பதிவாளர் தணிக்கை அருள்ஜோதி, சார் பதிவாளர் ஸ்ருதி, திமுக ஒன்றிய செயலாளர்கள் சூரியனூர் சந்திரன், பொய்யாமணி தியாகராஜன், புழுதேரி அண்ணாதுரை, ராமர், ஒன்றிய பொறுப்பாளர்கள் கதிரவன், கரிகாலன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.