இதில் கரூர் மாவட்டத்தில் 11 நூலகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட குளித்தலை கிளை நூலகத்தில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு கட்டிடம் திறப்பு விழாவை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர் நந்தகுமார், நகராட்சி பொறியாளர் கார்த்திக், கிளை நூலகர்கள் செல்வராஜ், முருகாம்பாள், வாசகர் வட்ட தலைவர் கிராமியம் நாராயணன், துணை தலைவர் அந்தோணிசாமி, வாசகர் வட்ட உறுப்பினர்கள் லில்லிசகாயமேரி, சுந்தர், கராத்தே சரவணன், திமுக மாவட்ட பிரதிநிதி ஜாபருல்லா, வழக்கறிஞர் சாகுல்அமீது மற்றும் வாசகர்கள், திமுக நகர நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.