கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள சுரும்பார் குழலி உடனுறை இரத்தினகிரீஸ்வரர் சுவாமிக்கு வருகின்ற 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெறுகிறது. இதையொட்டி சிவாச்சாரியார்கள் முகூர்த்த காலுக்கு பல்வேறு பூஜைகள் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டு, மலை மேல் உள்ள 63 நாயன்மார்கள் மண்டபத்தில் கம்பத்தின் அருகே முகூர்த்த கால் வைக்கப்பட்டது.