குளித்தலையில் நல்லக்கண்ணு மறைவுக்கு துக்கம் அனுசரிப்பு

நல்லக்கண்ணுவின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில், கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. மேலும், கருப்புக் கொடி ஏந்தி, நல்லக்கண்ணுவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி