மேட்டு மருதூரில் மருதூர் பேரூராட்சி சாதாரண கூட்டம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுமருதூர் சமுதாய கூடத்தில் மருதூர் பேரூராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சகுந்தலா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நாகராஜன் மற்றும் செயல் அலுவலர் அண்ணாமலை முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மொத்தம் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுகாதார மேற்பார்வையாளர் பாக்கியம், அலுவலக உதவியாளர் முத்துக்குமார், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி