கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மருதூர் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியில் இருந்த வரித்துறை அதிகாரி சரவணன், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இளநிலை உதவியாளர் சரவணகுமார், பணியிட மாற்றமாக புலியூர் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். இதனால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக காலியாக இருந்து வருகிறது. இதில் புதிய பணியாளர்களை போர்க்கால அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.