கரூர் மாவட்டம் குளித்தலை மகா மாரியம்மன் கோவில் திருவிழா மே 3 ஆம் தேதி கம்பம் ஊன்றுதல் மற்றும் பூச்சொரிதலுடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மன் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. நான்கு வீதிகளில் வடம் பிடித்து பக்தர்கள் தேரை இழுத்தனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.