கரூர் மாவட்டம் குளித்தலை மேல குட்டப்பட்டியைச் சேர்ந்த சுதாகர் (35) என்பவர் நேற்று மாடுவிழுந்தான்பாறை பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து (35) என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 5000 கேட்டுள்ளார். சுதாகரிடம் பணம் இல்லாததால், ரூ. 1000 பறித்துச் சென்றுள்ளார். இது குறித்து சுதாகர் அளித்த புகாரின் பேரில், நங்கவரம் போலீசார் செல்லமுத்து மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர்.