குளித்தலையில் கிணற்றில் விழுந்த ஆண் புள்ளி மான் உயிருடன்

கரூர் மாவட்டம் வடசேரி பெரிய ஏரியில் 100க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் உள்ளன. வறட்சி காரணமாக உணவு, தண்ணீர் தேடி மான்கள் குடியிருப்புகளை நோக்கி வருகின்றன. இந்நிலையில், போஜாநாயக்கன்பட்டியில் தண்ணீர் இல்லாத கிணற்றில் 2 வயது ஆண் புள்ளிமான் தவறி விழுந்தது. தகவல் அறிந்த கரூர் வனச்சரக அலுவலர்கள், மணப்பாறை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் மானை மீட்டனர். பின்னர், மானை கடவூர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

தொடர்புடைய செய்தி