இது குறித்து குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்து போலீசார் முசிறி தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் அழுகிய நிலையில் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவரின் விபரங்கள் குறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.