கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோடங்கிப்பட்டி கிராமத்தில் அன்னை மஹாசக்தி ஸ்ரீ பாப்பாத்தி அம்மன், ஸ்ரீ நாகம்மாள், ஸ்ரீ ரெங்கம்மாள், அருள்மிகு முருகன், அருள்மிகு பாலகுருநாதர், ஸ்ரீ சந்தன கருப்புசாமி, ஸ்ரீ சங்கிலி கருப்புசாமி ஆகிய தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தல்லபின்னிவார் குல பங்காளிகள், மாமன் மைத்துனர்கள், குடிபாட்டுக்காரர்கள், பொதுமக்கள், சாமியாடிகள் என பலரும் கலந்துகொண்டு புனித நீரை கண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது.