பெரியபாலம் சோதனை சாவடி.. மணல் கடத்திய லாரி பறிமுதல்

கரூர் மாவட்டம் குளித்தலை பெரியபாலம் சோதனை சாவடியில் குளித்தலை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கு இடமாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் 5 யூனிட் ஆற்று மணலை உரிய ஆவணங்கள் இன்றி கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனையடுத்து திருச்சி மாவட்டம் கவுண்டம்பட்டியைச் சேர்ந்த வாசுதேவன் 25 என்பவர் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் 5 யூனிட் மணலுடன் லாரி பறிமுதல் செய்தனர்

தொடர்புடைய செய்தி